![]() |
பஷில் ராஜபக்ஷ |
ஜெனீவாவில்
அமைந்துள்ள ஐக்கிய நாடு கள் சபை மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு
எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு
அமெரிக்காவே பிரதான காரணமாகும் எனவும் அதாவது இலங்கைக்கு எதிராக
வாக்களிப்பது என்ற அசௌகரியமான தீர்மானத்தை இந்தியாவை எடுக்கவைத்தது
அமெரிக்காவே எனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்ர் பஷில் ராஜபக்ஷ
தெரிவித்தார்.
இந்தியாவின் தீர்மானம்
காரணமாக நாங்கள் கோபப்படவில்லை. அத்துடன் இந்தியாவின் நிலைமையை
புரிந்துக்கொண்ட நாங்கள் வேதனையடைந்தோம். இந்தியாவும் வேதனை
அடைந்திருக்கும் என்று எண்ணுகின்றோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா
மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான
வாக்கெடுப்பில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. இந்தியாவின் இந்த
செயற்பாட்டினால் இலங்கை மிகவும் வேதனையடைந்தது. அதற்காக நாங்கள்
இந்தியாவுடன் கோபப்படவில்லை. காரணம் இந்தியாவின் அசௌகரியம் குறித்து
நாங்கள் அறிந்துகொண்டிருந்தோம்.
அதாவது
வரலாற்று ரீதியான நட்புறவைக் கொண்ட இலங்கைக்கு எதிராக வாக்களிக்க
நேர்ந்தமை குறித்து இந்தியா வேதனை அடைந்திருக்கும் என்று நாங்கள்
நம்புகின்றோம். ஆனால் இந்தியாவினால் எதனையும் செய்ய முடியாத நிலைமையே
காணப்பட்டது.
இந்தியா இவ்வாறான முடிவை
எடுத்தமைக்கு தமிழ்நாட்டின் அழுத்தம்தான் பிரதான காரணம் என்று கூற
முடியாது. மாறாக அமெரிக்காவே இந்தியாவை இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமைக்கு
தள்ளி விட்டது. இந்தியா இவ்வாறான அசௌகரியமான தீர்மானத்தை எடுப்பதற்கான
அழுத்தத்தை அமெரிக்காவே பிரயோகித்தது.
அதாவது,
இந்தியாவுக்கு இந்த அநீதியை அமெரிக்கா செய்தது வெளிப்படையாகும். இதுதான்
உண்மை நிலையாகும். ஒருவேளை இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால்
இன்று அந்நாட்டின் அரசாங்கம் பதவியில் இருந்திருக்காத நிலையே
ஏற்பட்டிருக்கும்.
அதேவேளை இந்திய
எதிர்க்கட்சி தலைவி தலைமையில் அந்நாட்டின் சர்வகட்சி எம்.பி. க்கள்
குழுவினர் இலங்கை வரவுள்ளனர். இவ்வாறான கால கட்டத்தில் இந்திய சர்வகட்சி
எம்.பி. க்கள் குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது என் பது மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அவர்களினால்
இந்த விஜயத்தின் ஊடாக இலங்கையில் உண்மையில் என்ன நடக் கின்றது என்ற
யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியும். இந்திய சர்வகட்சி எம். பி. க்கள்
நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர். அதன்மூலம்
அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு வே லைத்திட்டங்களையும் அவர்களினால் மேற்கொள்ள
முடியும்.
இந்தியாவுடனும்
சீனாவுடனும் நாங்கள் நெருக்கமான உறவையே பேணிவருகின்றோம். அதனை மேற்கு
நாடுகளினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனினும் நாங் கள் அணிரோ
கொள்கையுடன் தொடர்ந்து முன் செல்வோம் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
source:
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/75996/language/ta-IN/article.aspx