Sunday, April 29, 2012

வடக்கு கிழக்கை கண்காணிக்க டில்லியில் விசேட அலுவலகம்.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளையும் கண்காணிப்பதற்குப் புதுடில்லியில் அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் இந்திய அரசின் கவனம் திரும்பியுள்ளதாகத் தெரியவருகிறது.

அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவியான சுஷ்மா சுவராஜ் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்தபோது இது தொடர்பான யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார். இதற்கமையப் புதுடில்லியில் இந்தக் கண்காணிப்பு அலுவலகத்தை நிறுவுவது குறித்து இந்திய அரசு கவனம் செலுத்தியுள்ளதாகப் புதுடில்லி இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.


இந்தக் கண்காணிப்பு அலுவலகம் நிறுவப்பட்டதன் பின்னர் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளையும் ஆராய்ந்து அது தொடர்பில் இந்திய அரசுக்குத் தெரியப்படுத்துவதற்கு விசேட பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான ஒரு விசேட அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://thaaitamil.com/?p=17378

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator