Monday, April 23, 2012

தம்புள்ள நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் சிங்ளவர்கள் எவரும் பொருட் கொள்வனவு செய்யக் கூடாது

பௌத்த விகாரையின் பிரதம சங்க நாயக்கர் - இர்ஷாத் றஹ்மத்துல்லா
 தம்புள்ள ரன்கிரி பிரதேசத்தில் சர்ச்சைக்குட்படுத்தப்பட்டுள்ள ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாலை சூழ பாதுகாப்பு நிமித்தம் விசேட அதிரடிப் படைகளினால் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,அப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலீஸ்,இரானுவம்,விசேட அதிரடிப் படையினர் என குவிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதே வேளை இன்று காலை பௌத்த விகாரையின் பிரதம சங்க நாயக்கர் மூலம் சகல சிங்கள கிரமாங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்தியாதெனில் தம்புள்ள நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் சிங்ளவர்கள் எவரும் பொருட் கொள்வனவு செய்யக் கூடாது என்று ,இதே வேளை நேற்று மாலை முஸ்லிம்கள் செறிந்து வாழும் நிக்கவட்டவன கிராமாத்துக்கு சென்ற பாதுகாப்பு அதிகாரிகள்,மற்றும் பௌத்த பன்சலையினை சேர்ந்த இரு பிக்குகள்,பள்ளிவாசல் விடயத்தில் தலையிட வேண்டாம் என எச்சரிக்கையும் விடுத்துச் சென்றுள்ளதாக கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.
தற்போது நகரப்பகுதியில் பதற்ற நிலை காணப்படுவதாகவும், சில முஸ்லிம் குடும்பங்கள் அங்கு இருப்பதாகவும் தெரியவருகின்றது.அதே வேளை இன்று மாலை தம்புள்ள பிரதேச செயலாளரின் தலைமையில் கூட்டம் ஒன்று இடம் பெறுவதாகவும் அதில் முஸ்லிம்கள் எவரும் கலந்து கொள்வதில்லையென்ற தீர்மானமும் பள்ளி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது.தங்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டவர்கள் இக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொள்வதால் இக் கூட்டத்தில் தங்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்காது என்பதனாலேயே இக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லையென்ற முடிவை எடுத்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Source: http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/76520/language/ta-IN/article.aspx

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator