Saturday, April 14, 2012

உயர்கல்வி சான்றிதழை சர்வதேச தரத்திற்கு மாற்ற நடவடிக்கை; சுனில் ஜயந்த

 news
உயர்கல்வி சான்றிதழ்களை சர்வதேச  தரத்திற்கு அங்கீகாரம் பெற்றவையாக மாற்ற நடவடிக்கை​கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற சான்றிதழ்களுக்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை என  அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சுனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.


தற்போது உயர்கல்வி நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் உயர்கல்வி சான்றிதழ்கள் எதிர்வரும் காலங்களில் சர்வதேச  தரம்மிக்கவையாக மாற்ற நடவடிக்கை​ளை எடுக்கப்பட்டள்ளது.

இதற்கு அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நாட்டிலுள்ள உயர்கல்வி துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எதிர்காலத்தில் சர்வதேச நாடுகளில் உள்ள கல்வி முறைமைகளை எமது நாட்டிலும் அறிமுகப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator