Wednesday, April 18, 2012

மீனவர்களுக்கு வயர்லெஸ் கருவிகள் வழங்க தமிழகஅரசு முடிவு

ராமநாதபுரம் ஏப்19 கடலில் மீன்பிடிக்க செல்லும்போது ஏற்படும் இயற்கை சீற்றங்கள் குறித்து கரையில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு ரூ 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கம்பியில்லா தகவல்தொடர்பு சாதனங்கள் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என்றும், அதற்கு சம்மந்தப்பட்ட மீன்துறை உதவி இயபக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பித்து பயனடையும்படியும் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கடலுக்குள் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும்
கடல்சீற்றங்கள், இன்னல்கள், குறித்து உடனடியாக கரையில் இருக்கும் அரசுத்துறையினருக்கும் மற்ற மீனவர்களுக்கும் தகவல் தெரிவிப்பதற்கு ஏதுவாக மீனவர்களுக்கு ரூ 14 ஆயிரம் மதிப்பில் கம்பியில்லா தகவல்தொடர்பு சாதனங்களை விலையின்றி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, சின்னஏர்வாடி, பாம்பன், ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ராமேஸ்வரம், ராமநாதபுரம், மண்டபம் ஆகிய இடங்களில் உள்ள மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் வழங்கப்படுகிறது என்றும் இம்மாதம் 27 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என்றும் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். மேலும் தகவல்களுக்கு சம்மந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
source: http://www.thinaboomi.com/2012/04/18/12029.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator