Wednesday, April 11, 2012

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மீணடும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மீணடும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை மாலை 125.65 ரூபாவாக இருந்த ஒரு டொலரின் மதிப்பு நேற்று 128 ரூபாவாக அதிகரித்தது.

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்து, இன்று முற்பகல் ஒரு அமெரிக்க டொலர் 130 ரூபாவாக விற்கப்பட்டது.


கடந்த மார்ச் 19ம் நாள் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியடைந்து, அமெரிக்க டொலர் ஒன்று 131.60 ரூபாவாக விற்கப்பட்டது.

இதையடுத்து சிறிலங்கா அரசாங்கம் நாணய மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க முனைந்தது.

இந்தநிலையில் கடந்தவாரம் டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு 125 ஆக உயர்ந்தது.

எனினும் இந்தவாரம் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator