Monday, April 9, 2012

கேதீஸ்வரத்தில் வெண்கலப் புத்தர்

மன்னார், திருக் கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக் கரைக்குச் சமீபமாக தனியார் காணி ஒன்றில் போயா தினமான கடந்த வெள்ளிக்கிழமை வெண்கலத்திலான புத்தர் சிலை திடீரென கொண்டு வரப்பட்டு "பிரித்" ஓதி வழி பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் தனியார் காணியில் சிறிய புத்தர் சிலை ஒன்றை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.ஆனால் தற்போது திடீரென மேற்படி வெண்கலத்திலான சிலை கொண்டுவரப்பட்டு அங்கு வழிபாட்டுத் தலமும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. சுமார் ஆயிரத்து 500 கிலோ கொண்ட இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டமை மன்னார் மாவட்ட இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருக்கேதீஸ்வரத்தின் தீர்த்தக் கரையான பாலாவிக்குச் சமீபமாக, இந்த பௌத்த வழிபாட்டுத் தலம் நிர்மாணிக் கப்பட்டுள்ளதால் இந்துக்கள் மத்தியில் அச்ச உணர்வும் பீதியும் காணப்படுகிறது.
இந்தப் பகுதியில் பௌத்த மக்கள் எவரும் வசிக்காத நிலையில், தனியார் காணியை அபகரித்து பௌத்த தலம் அமைக்கப்பட்டுள்ளமை திருக்கேதீச்சரம் தனித்து இந்து மத வழிபாட்டிடமாக இருப்பதை மாசுபடுத்துவதற்கான திட்டமிட்ட நடவடிக்கை என்று பிரதேச இந்து, கிறிஸ்தவ மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
புதிதாக மத வழிபாட்டுத்தலங்கள் அமைப்பதற்கு பிரதேச செயலகம் மற்றும் கலாசார, மத விவகாரங்கள் அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால் இந்த நடைமுறை ஏதும் கைக்கொள்ளப்படாமல் படையினர்
 

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator