Saturday, April 21, 2012

நண்பனின் ஆணுறுப்பை அறுத்துவிட்டு தப்பியவருக்கு வலைவீச்சு

Photo:http://legacy.guardian.co.tt
சென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சரவணன், 38;முறுக்கு வியாபாரி. திருவொற்றியூரை சேர்ந்தவர் சங்கர், 28. நண்பர்களான இருவரும், நேற்று முன்தினம் மாலை குடிமையத்திற்கு சென்றனர். அங்கு சரவணன் பணம் கொடுத்து மதுபாட்டிலை வாங்கி, சங்கருக்கு குறைவாக மதுவைக் கொடுத்தாராம்.
இதனால், நண்பர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது. பின், சரவணன், சிறுநீர் கழிக்கச் சென்றார்.
அப்போது, தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பிளேடால் சரணவனின் ஆணுறுப்பை சங்கர் நறுக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். சரணவன் அலறி துடித்தார். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



பொதுமக்கள், 108 ஆம்புலன்சை வரவழைத்து சரவணனை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சரவணனுக்கு ஆணுறுப்பை இணைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Source: http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=74402

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator