Saturday, April 14, 2012

இலங்கையைக் கண்காணிக்கும் உரிமை இருப்பதாக இந்தியா நினைப்பது தவறு பாராளுமன்றக் குழு நாளை வருகை தரும் நிலையில் அமைச்சர் சம்பிக்க கருத்து


கண்காணிப்புகளை மேற்கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாக இந்தியா நினைப்பது தவறு என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்தியப் பாராளுமன்ற அனைத்துக்கட்சி குழுவொன்று இலங்கை நிலைமைகளை நேரில் பார்வையிட நாளை திங்கட்கிழமை கொழும்பு வரவுள்ள நிலைமையிலேயே அமைச்சர் ரணவக்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இந்திய எம்.பி.க்கள் குழுவின் இலங்கை விஜயம் பற்றி கருத்து வெளியிட்ட அவர்;

"இந்திய எம்.பி.க்கள் குழுவினரை நாம் வரவேற்கிறோம். எனினும், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது வடக்கு, கிழக்கின் நிலைமைகள் பற்றிய புரிந்துணர்வு அவர்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி அந்த புரிந்துணர்வு அவர்களுக்கு இருந்தால் விடுதலைப்புலிகள் இருந்தபோது வடக்கு, கிழக்கின் நிலைமையையும் தற்போது அப்பிரதேசங்களின் நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்த்து உண்மை நிலைமையை உணர முடியும்.
தமிழ் மக்களின் கஷ்ட நிலைமைக்கு புலிகளைத் தவிர வேறு யாரும் காரணமாக இருக்கவில்லை. புலிகள் இருந்த காலத்தையும் புலிகளின் பின்னரான காலத்தையும் அவர்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
அத்துடன், இலங்கை என்பது இறைமையுள்ள சுயாதீன நாடு என்பது இந்திய அரசியல்வாதிகளுக்குப் புரியவேண்டும். காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் செய்து மனிதஉரிமைகள் மீறல்கள் பற்றிப் பேசினால் இந்தியா படும் மனவருத்தம் எமக்குத் தெரியும். இந்திய எம்.பி.க்கள் குழுவை நாம் வரவேற்கிறோம். எனினும், இலங்கையில் தேடிப்பார்த்து கண்காணிப்புகளை மேற்கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாக இந்தியா நினைப்பது தவறாகும். காஷ்மீர், வங்காளம், நாகலாந்து போன்ற பகுதிகளுக்கு நாம் போய் பார்ப்பதை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா?
ஆகவே, புலிகள் இருந்த பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களினதும் அதற்கு வெளிமாவட்டங்களில் வாழ்ந்த தமிழ் மக்களினதும் நிலைமைகளை ஒப்பிட்டுப்பார்த்தால் இந்திய குழுவினருக்கு உண்மையான நிலைமைகளைப் புரிந்துகொள்ள முடிவதுடன், முன்னேற்றங்களையும் அவதானிக்க முடியும் என்று தெரிவித்தார்.
இதேநேரம், இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்ததற்கான காரணம் பற்றி இந்திய அரசியல்வாதிகளிடம் நேரடியாக கேள்வி எழுப்ப உருவாகியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்;
இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்தமை பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அது அவர்களது உரிமை. எனினும் ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டது. அவ்வளவுதான் என்று கூறினார்.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/12781-2012-04-14-19-11-20.html

1 comment:

  1. Contradicting statement of the Minister. He welcomes Indian delegates and advice them to compare the people\s life and again states that the Indian Government's intention of observe/supervise this country is wrong.

    What is nonsense? No 1 hypocrisy.

    A neighbouring country which helps in various ways can supervise activities of the country where they help.

    ReplyDelete

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator