Wednesday, April 11, 2012

சுனாமி: கூடங்குளத்தில் பெரும் பீதி- அணு மின் நிலைய இயக்குநர் தலைமையில் அவசர ஆலோசனை

கூடங்குளம்: இந்தோனேசிய நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை ஆகியவற்றைத் தொடர்ந்து அணு மின் நிலையம் அமைந்துள்ள கூடங்குளத்தில் பெரும் பீதி ஏற்பட்டது. அணு மி்ன் நிலைய வளாகத்திலும் கூட பய ரேகைகள் படர்ந்தது. அவசர ஆலோசனைக் கூட்டமும் நடந்தது.

இந்தோனேசியாவில் சுமத்ராவை மையமாகக் கொண்டு 8.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இதையடுத்து 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சென்னையிலிருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில் கடலில் கடும் நில அதிர்வுகள் ஏற்பட்டதால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனர்.

இந்த நிலையில் கூடங்குளம் பகுதியிலும் பெரும் பீதி காணப்படுட்டது. அங்குள்ள அணு மின் நிலையத்திற்கு நிலநடுக்கத்தாலோ அல்லது சுனாமி தாக்கினாலோ ஏதாவது ஏற்படுமா என்ற பயம் காணப்பட்டது.

இந்த நிலையில், கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குநர் காசிநாத் பாலாஜி தலைமையில் அணு மின் நிலையத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.

போலீஸாரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கடலோரப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
Source: http://tamil.oneindia.in/news/2012/04/11/tamilnadu-earth-quake-urgent-discussion-held-kudankulam-aid0091.html

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator