Thursday, April 19, 2012

தடுமாற்றமில்லா தாம்பத்யம் வாழ்க்கைக்கு அவசியம்!

மனிதர்களின் வாழ்க்கையில் திருமணம் என்பது அவசியமானது. அது மனிதர்களை முழுமையாக்குகிறது. காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவாக இருந்தாலும் தம்பதியர் சில வருடங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக காலம் கழிக்கின்றனர். அப்புறம் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அது மணமுறிவில் போய் நிற்கிறது. உலக அளவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தம்பதியர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுகின்றனர். ஆயிரக்கணக்கானோர் தாங்களாகவே பிரிந்து விடுகின்றனர்.

தம்பதியர் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பணப்பிரச்சினை, பொறுப்பற்ற தன்மை, குடி, போதை, சூதாட்டம், தம்பாத்ய பிரச்சினை, சுயநலத்தன்மை, ஒரு சில மேனரிசங்கள் போன்றவை தம்பதியரிடையே பிடிக்காமல் போய் பிரிவு ஏற்படுகிறது. எனவே இவற்றினை தவிர்த்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள். இல்லற வாழ்க்கையில் இனிமையும், கிளர்ச்சியும் ஏற்பட உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.


கோபத்தை கட்டுப்படுத்துங்கள்

குடும்ப வாழ்க்கையில் கோபம்தான் முதல் எதிரி. எனவே கோபத்தை கட்டுப்படுத்துங்கள். ஒருவருக்கொருவர் மதிப்பளியுங்கள். இருவரும் இணைந்து பிரச்சினைகளை தீர்க்க முயலுங்கள். குடும்ப வாழ்க்கையில் வின்-வின் முறைதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.

கலந்து ஆலோசியுங்கள்

எந்த ஒரு பிரச்சினை என்றாலும் வாழ்க்கைத்துணையுடன் கலந்து ஆலோசனை செய்யுங்கள். இது ஒருவருக்கொருவர் ஈகோ ஏற்படாமல் தடுக்கும்.குடும்பத்தில் ஆணைவிட பெண் அதிகம் சம்பாதிக்கும் பட்சத்தில் அது உணர்வு ரீதியான சிக்கலை ஏற்படுத்தும். எனவே வாழ்க்கைத்துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்கும்.

தடுமாற்றமில்லா தாம்பத்யம்

மணவாழ்க்கையில் செக்ஸ் அத்தியாவசியமான அவசியமான ஒன்று, ஆண், பெண் இருவரின் தேவையும் நிறைவேறும் பட்சத்தில் பிரச்சினைகள் எழ வாய்ப்பு இல்லை. எனவே உங்கள் துணையின் ஆசைக்கு மறுப்பு தெரிவிக்காதீர்கள். அது இல்லறத்தில் கிளர்ச்சியை தக்கவைக்கும்.

குழந்தை அவசியம்

என்னதான் உலக அழகியை திருமணம் செய்து கொண்டாலும் சில வருடங்களில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தால் அது போரடிக்கும். திருமணம் முடிந்து ஒருவருடத்தில் குழந்தைக்கு தயாராகிவிடுங்கள். அது தம்பதியரிடையே பிணைப்பை அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியம்

தம்பரியரிடையே உடல் ஆரோக்கியமாக இருப்பது அவசியமானது. தேவையற்ற கோபம் வந்தால் நல்ல உளவியல் நிபுணரை ஆலோசனை செய்யுங்கள். மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.

பொருளாதார வளர்ச்சி

இல்லறத்தில் பணத்தின் தேவை அவசியமானது. பொருளாதார ரீதியான பிரச்சினைகள் குடும்பத்தில் உருவாகும் பட்சத்தில் தம்பதியரிடையே சிக்கல்கள் எழுகின்றன. எனவே பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளுங்கள்.

பொருளாதார சிக்கல் ஏற்படாமல் இருக்க எளிமையான வாழ்க்கை வாழுங்கள். விலை அதிகம் கொண்ட துணி, பொருட்களில் பணத்தை முடக்காதீர்கள். எது தேவையோ அதன் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள். ஒட்டல்களில், ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவது நல்லது. சிக்கனமான வாழ்க்கை குடும்பத்தில் பணம் சேமிக்க உதவும்.

நேரத்தை செலவிடுங்கள்

குடும்ப உறவுகளுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். தம்பதி சமேதராக அடிக்கடி தனிமையில் பேசி மகிழுங்கள். திருமணம் என்பது விளையாட்டல்ல அது இரண்டு இரண்டு இதயங்களோடு தொடர்புடையது. மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினால் காலத்திற்கும் மணவாழ்க்கையில் விரிசல்கள் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
http://tamil.boldsky.com/relationship/2012/04/how-add-sizzles-on-your-married-life-aid0174.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator