
முஸ்லிம்கள் வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட போது அதற்கு எதிராக குரல் கொடுத்தவனும் நானே என்று மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவை நேற்று மன்னாரில் கூட்டமொன்றை நடத்தியபோதும் இதை நான் தெரிவித்தேன். மன்னாரில் இடம்பெறும் அடாவடித்தன சக்திகள் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுத எனக்கு பூரண உரிமை உண்டு.
மன்னார் மாந்தை மேற்கு பிரிவைச் சேர்ந்த விடத்தல்தீவு முஸ்லிம்கள் அரச அங்கீகாரமின்றி சன்னார் கிராமத்திலுள்ள காணிகளை தமது சொந்தப் பாவனைக்கெனக் கூறி ஆக்கிரமிக்கின்றனர். இதேபோன்று நானாட்டான் அச்சன் குளத்திலும் காணி ஆக்கிரமிப்பு இடம்பெறுகிறது.
இதேவேளை விடத்தல்தீவைச் சேர்ந்த 470 தமிழ்க் குடும்பங்கள் அரச காணிகளைப் பெற்றுக் கொள்வதற்காக மாந்தை மேற்கு கிராமசேவகடம் முறையாக விண்ணப்பித்துள்ளன.
இந்த விண்ணப்பங்கள் இன்னமும் பரிசீலிக்கப்படாமல் மாந்தை பிரதேச செயலாளர் அலுவலக்தில் தேங்கிக் கிடக்கின்றன.
மேற்கண்டவாறே நான் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
அரசாங்க காணிகளைப் பெற்றுக்கொள்வதில் ஒரு வழிமுறை இருக்கின்றது. அதை பின்பற்ற வேண்டும்.
விடத்தல்தீவில் 470 தமிழ் குடும்பங்கள் காணிக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில் முஸ்லிம் குடும்பங்கள் அடாவடித்தன அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அரச காணிகளை ஆக்கிரமிக்கலாமா?
இவ்வாறு அவர் தெவித்தார்.
http://www.thedipaar...ws.php?id=45841
No comments:
Post a Comment