Friday, May 4, 2012

மூளை வளர்ச்சி குறைந்த வர்களுக்கு நல்ல செய்தி

http://tamil.indiansutras.com/img/2012/04/26-sex44-300.jpgசெக்ஸ் என்ற வார்த்தையே ஒரு சிலருக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தும். மூளை, உடல் ஆகியவற்றை உற்சாகப்படுத்தும். அந்த வார்த்தையை போல மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் செக்ஸ்சுக்கு உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உடலுறவினால் ஏற்படும் நன்மைகள்/தீமைகள் பத்தி எத்தனையோ ஆய்வுகள், பல்வேறு மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. பதின்பருவத்தினர் செக்ஸ் வைத்துக்கொண்டால் மூளை சோர்வடையும் என்று கூட ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. அதேபோல சுவாரஸ்யமான ஆய்வு ஒன்று சமீபத்தில் நடைபெற்றுள்ளது.
மன உளைச்சல்
துன்பகரமான, மன உளைச்சல் தரக்கூடிய செயல்கள் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன என்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது. அதேபோல் இன்பம், உற்சாகம் தரக்கூடிய செயல்களை செய்தால் மூளை வளர்ச்சியின் மீது ஏதாவது தாக்கம் ஏற்படுகிறதா என்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்காக அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலிகளை வைத்து பரிசோதனை செய்தனர். வயது வந்த ஆண் எலிகளுடன் உடலுறவில் ஈடுபடத் தகுதியுள்ள பெண் எலிகளை ஒரே பெட்டிக்குள், ஒரு நாளில் இருமுறை அல்லது இரு வாரங்களில் ஒரு முறை என ஒன்றாக வைத்தார்கள்.
அப்படி வைத்த எலிகளின் ரத்தத்தில் இருக்கும் மன உளைச்சலுடன் தொடர்புடைய ஹார்மோனான குளுக்கோகார்டிகாய்ட்ஸின் (glucocorticoids) அளவையும் கணக்கிட்டார்கள். மூளை வளர்ச்சி மீதான துன்பமான நிகழ்வுகளின் தாக்கத்துக்கு இந்த ஹார்மோன் காரணமாயிருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டார்கள் ஆய்வாளர்கள்!
படபடப்பு குறைந்தது
சோதனையின் முடிவில், கன்னி கழியாத எலிகளுடன் ஒப்பிடுகையில், செக்ஸ்/உடலுறவில் ஈடுபட்ட எலிகளின் மூளை வளர்ச்சி அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டது. பெண் எலிகளுடன் இரு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே உறவுகொண்ட எலிகளின் உடலில் உளைச்சல் தொடர்பான ஹார்மோன்களின் (stress hormones) அளவு அதிகரித்துவிட்டிருந்ததாம். ஆனால், தினமும் இரு முறை பெண் எலிகளுடன் உறவு கொண்ட ஆண் எலிகளின் உடலில் உளைச்சல் தொடர்பான ஹார்மோன்கள் அதிகரிக்கவே இல்லையாம்!.
உறவில் அதிகம் ஈடுபட்ட எலிகளிடம், எலிகளின் பொதுவான குணமான படபடப்பு, பயம் போன்றவை குறைவாக இருந்ததாம். அவை, புதிய சூழல்களில் விடப்பட்டபோது உணவை எந்த தயக்கமும், பயமும் இல்லாமல் உண்டனவாம்!
நினைவுச்செல்கள் அதிகரிப்பு
குறிப்பாக, மூளையின் நினைவுச் செயல்களுக்கு அடிப்படையாக கருதப்படும் ஹிப்போகேம்பஸ் (hippocampus) என்னும் பகுதியிலுள்ள நரம்புகள், அணுக்களின் எண்ணிக்கை கூடியிருந்ததும் கண்டறியப்பட்டது. துன்பமான நிகழ்வுகளின்போது இந்தப் பகுதியின் அணுக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் தன்மையுடையவை என்பது குறிப்பிடத்தக்கது!
மூளை வளர்ச்சியை பாதிக்கும் தன்மை உடைய உளைச்சல் ஹார்மோன்களின் பாதிப்பை, செக்ஸ் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய அனுபவங்களின்மூலம் மாற்றியமைக்க முடியும்” என்று தெரியவந்துள்ளதாக கூறினர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்!

source: http://tamil.indiansutras.com/img/2012/04/26-sex44-300.jpg

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator