அமெரிக்க கப்பற்படையைச் சேர்ந்த எப்.ஏ -18 டி போர் விமானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி பயிற்சிக்காக இந்த விமானம் வானில் பறந்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகியது.
இவ்விமானம் விர்ஜினியா பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளில் விழுந்து நொறுங்கியது. இதில் 40-ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததது மட்டுமின்றி தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகையால் சூழப்பட்டது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த எரிபொருள், வீடுகளின் மேல் பரவியதால் தீ விபத்து ஏற்பட்டது எனவும், இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து ஏற்பட்டபோது இரண்டு பயிற்சி விமானிகள் பாதுகாப்பான முறையில் வெளியே குதித்து தப்பினர். இவ்விபத்தில் 7 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த விமானத்தை ஓட்டி வந்த விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதாக என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் கேப்டன் மார்க் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்திற்கு வந்த அமெரிக்க மீட்புப் படை, விமானத்தின் சிதறிய பகுதிகளையும் மற்றும் மீட்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளதாக விர்ஜினியா கடற்பகுதியின் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் தலைவர் டிம் ரிலே தெரிவித்துள்ளார்.
Source: http://thaaitamil.com