நமது எண்ணங்கள் எங்கெங்கோ திரிகின்றன. வினாடிக்கு வினாடி மாறிக்கொண்டே இருக்கின்றன. எந்த ஒரு சிந்னையும், எண்ணமும் தொடர்ந்து 20 வினாடிக்குமேல் தொடராது என்கிறது விஞ்ஞானம். எவ்வளவுதான் முனைப்பாக இருந்தாலும் நமது மனமானது, தான் சிந்தித்த பொருளைவிட்டு வேறு ஒன்றுக்கு தாவி விடுகிறது. எனவேதான் நாம் தடுமாறுகிறோம். நமது எண்ணங்கள், ஆசைகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.