மன்னாரில் மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கு நியமனக்கடிதம்

[03-04-2012]
மன்னார்
பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட மத்தியஸ்தர் சபை
உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை
மாலை 3 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் இடம்
பெற்றது.
இதன் போது குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்கலாக மன்னார் மாவட்ட
அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர,மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர்,
மத்தியஸ்தர் சபை இணைப்பாளர் சனாதன சர்மா,மன்னார் நகர பிதா
எஸ்.ஞானப்பிரகாசம்,நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்பு ராஜ் லெம்போட்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது மத்தியஸ்தர் சபையின் தலைவராக ஆர்.பிரின்ஸ் டயஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இதன்
போது மத்தியஸ்தர் சபை உறுப்பினர்கலாக தெரிவு செய்யப்பட்டிருந்த 14
பேருக்கும் நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டதோடு,சின்னஞ்சுட்டும் வைபவமும்
இடம் பெற்றது.
Source:http://www.mannarwin.com