
(03-04-2012)
மன்னார்
தாழ்வுபாடு-தாராபுரம் பிரதான வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்
பெற்ற விபத்திற்குப் பின்னனியில் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார்
உள்ளதாக அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மன்னார்
தாழ்வுபாடு தாராபுரம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிலில்
பயணித்துக்கொண்டிருந்த தாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது
பர்ஸான்(வயது-18) கா.பொ.தா சாதராண தர வகுப்பு மாணவனும்,புத்தளம் தில்லையடி
அல்-ஹாசிமி சிட்டியை சேர்ந்த எம்.ஏ.எம்.அர்சத்(வயத-25) ஆகிய இருவரும்
மோட்டார் சைக்கிலில் பயணித்த போது மரம் ஒன்றுடன் மோதி சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த
இருவரும் தலைக்கவசம் இன்றி பயணித்துக்கொண்டிருந்த போது குறித்த வீதியால்
வந்த வீதி போக்கு வரத்துப்பிரிவு பொலிஸார் குறித்த இரண்டு பேரையும் இடை
மறித்த போதும் அவர்கள் நிற்காமல் மிகவும் வேகமாக மோட்டார் சைக்கிலில்
பயணித்துள்ளனர்.
இவர்களின்
பின்னால் வீதி போக்கு வரத்துப்பிரிவு பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிலில்
துரத்திச் சென்றுள்ளனர்.இதனை பலர் பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் கடும் வேகத்தில் பயணித்தமையினால் வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த இரு முஸ்ஸிம் இளைஞர்களும் மரத்துடன் மோதியுள்ளனர்.
இச்சம்பவத்தை பார்த்த வீதிப்போக்கு வரத்து பிரிவு பொலிஸார் தமக்கு தெரியாத வாறு அவ்விடத்தில் இருந்து செ;னறுள்ளனர்.
குறித்த
வீதியில் அதி வேகமாக பயணிக்க வேண்டிய அவசியம் இல்லாத போதும் இவ்
விபத்திற்கு மூல காரணம் வீதி போக்கு வரத்துப்பிரிவு பொலிஸரே என அப்பகுதி
மக்களும்,துரத்திச் சென்றதை நேரில் பார்த்தவர்களும் தெரிவித்துள்ளனர்.
Source: www.mannarwin.com