
வல்லரசு
என்ற அந்தஸ்தைக் கோரும் நாடு நிகழ்ச்சிகளைத் தனது பக்கம் இழுப்பதோடு
நிகழ்ச்சிகளின் முடிவுகளைத் தீர்மானிக்கும் வலுவுடன் இருக்க வேண்டும் இந்த
அடையாளம் இந்தியாவிடம் இல்லை.
இராணுவ
வலுச்சமநிலைச் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள இந்தியாவால் முடியவில்லை.
மத்திய கிழக்கில் அமெரிக்கா இஸ்ரேயில் நாட்டின் ஊடாக ஆதிக்கம்
செலுத்துகிறது. இந்த வரப்பிரசாதம் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை.
எதிரிகளைச்
சம்பாதிப்பதில் இந்தியா தனித் திறமையுடன் திகழ்கிறது. 1971 இந்திய
வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு. பாக்கிஸ்தானின் கிழக்கு அலகை வெட்டித்
தள்ளி அந்த இடத்தில் வங்காள தேசம் என்ற புதிய நாட்டை இந்தியா உருவாக்கியது.
அதே
ஆண்டு தொட்டு இந்தியா சக்திவாய்ந்த பிராந்திய வல்லரசாக வளர்ச்சி
பெற்றுள்ளது. இந்த வளர்ச்சியின் விளைவுகள் எதிரும் புதிருமாக இருக்கின்றன.
பாக்கிஸ்தானும் சீனாவும் பிரிக்க முடியாத நட்பு நாடுகளாக மாறிவிட்டன.