
.சிரியாவில் நாளை வியாழன் விடிந்தால் யுத்த நிறுத்தம் வந்துவிட வேண்டும் என்று ஐ.நாவின் முன்னாள் செயலர் கொபி அனான் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஒப்புக் கொண்ட விதிகளுக்கு அமைய நேற்றே யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருக்க வேண்டும், ஆனால் நடைபெறவில்லை. இக்கணம் வரை சிரிய அதிபர் தொடர் படுகொலைகளை நடாத்தியபடியே இருக்கிறார். இதுவே தற்போதைய மிகப்பெரிய துயரம் என்று ஐ.நா பாதுகாப்பு சபைக்கு நேற்று கொபி அனான் கடிதம் எழுதியிருந்தார். இருந்தாலும் இன்று காலை கருத்துரைத்த அவர் இந்த நிமிடம்வரை யுத்த நிறுத்த ஒப்பந்தம் செத்துப் போய்விடவில்லை என்று நம்பிக்கை தெரிவித்தார்.