Tuesday, April 17, 2012

10 மில்லியன் ரூபாவில் யாழ்.நூலகம் அபிவிருத்தி

யாழ். நூலகத்திற்கு ஆளுநரால் வழங்கப்பட்ட 10 மில்லியன் ரூபாவினைக்கொண்டு யாழ்.நூலகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இன்றைய தினம் யாழ்.நூலகர் குழுவுக்கும் மாநகர சபை முதல்வர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலிலே இம் முடிவு எடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் நூலகத்தினை மேலும் அழகுபடுத்தல், கணனிமயமாக்கல், பாதுகாப்பு கமராக்களை நூலகப் பகுதிக்குள் பொருத்துதல், மாநாட்டு மண்டபத்தை தெரிவு செய்தல், லிவ்ற் வசதி என்பவற்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காப்பகம், மற்றும் சுவடிக்கூடம் என்பவற்றை புதிய பிரிவுகளாக அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.


இவை அனைத்தும் யாழ்.நூலகத்தின் வெளியமைப்பில் மாற்றம் ஏற்படாத வகையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாநகர சபை ஆணையாளர் சரவணபவன், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் நூலகர் குழு உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
Source: http://184.107.230.170/~onlineut/News_More.php?id=80777986318616972

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator