பொருளாதார அபிவிருத்தி போன்றே வட மாகாண சபைத் தேர்தல் உட்பட அரசியல் ரீதியான மேம்பாடும் மிகவும் அவசியமானதென சுட்டிக்காட்டியுள்ள இந்தியத் தூதுக் குழுவினர் இலங்கை அரசு பெற்றெடுத்த குழந்தையான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கொழும்பு முழுமையாக அமுல்படுத்துமென எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அதேவேளை இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வாக 13+ வழங்கத் தயாரென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்து 3 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அது தொடர்பான முன்நகர்வு எதனையும் பார்க்க முடியவில்லையே என்று இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு தலைமை தாங்கிய இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கை வந்துள்ள இந்திய அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் எம்.பி.க்களைச் சந்தித்து பேசிய போதே இந்த வலியுறுத்தல்களை முன்வைத்துள்ளனர்.
இலங்கை எம்.பி.க்கள் குழுவுக்கு சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தலைமை தாங்கியதுடன் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியும் இச் சந்திப்பில் கலந்துகொண்டார். ஆளுந்தரப்பில் இருந்து பல்வேறு அமைச்சர்களும் ஏ.எச்.எம்.அஷ்வர் உள்ளிட்ட எம்.பி.களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் எதிர்க்கட்சி பிரதம கொறடா ஜோன் அமரதுங்க, சஜித் பிரேமதாச, ஆர்.யோகராஜன் உள்ளிட்டவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இலங்கை இனநெருக்கடிக்கு இதுவரை காலமும் தீர்வு காணப்படாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று இந்திய எம்.பி.க்கள் குழுவினர் இதன்போது வினவியுள்ளனர்.
அத்துடன், "அபிவிருத்தி முக்கியம் அதேபோல் வட மாகாண சபை தேர்தல் போன்ற அரசியல் அபிவிருத்திகளும் முக்கியம்' என்று இலங்கை எம்.பி.க்களிடம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ள இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இனநெருக்கடிக்கான தீர்வாக 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் சென்று “13 பிளஸ்‘ வழங்கத் தயார் என்று இலங்கை ஜனாதிபதி உறுதியளித்து 3 வருடங்களாகிவிட்ட போதும் இதுவரை அது விடயத்தில் எதுவும் நகர்ந்ததாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை "உங்களது குழந்தை' என்று இலங்கை எம்.பி.க்களிடம் கூறியுள்ள சுஷ்மா ஸ்வராஜ், அதனை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கென விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு பிரேரிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அதற்கான உறுப்பினர்களின் பெயர்களை பிரேரிக்காமல் இருப்பதினால் தெரிவுக்குழுவானது எந்த முன்னேற்றமும் இன்றி இருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தி அதில் இணக்கப்பாடொன்று எட்டப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்வதாக கூறியதை அரசாங்கம் முதலில் ஏற்றுக்கொண்ட போதிலும் பின்னர் அதில் முடிவொன்றை காண அரசாங்கம் தயாராக இருக்கவில்லை என்று சம்பந்தன் எம்.பி. தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் இதன்போது பதிலளித்துள்ளார்.
அத்துடன், எந்தெந்த விடயங்களைத் தீர்க்க வேண்டும் என்பது தொடர்பாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடம் முறையான குறிப்புகள் இல்லை என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், இலங்கையிலும் இந்தியாவைப் போன்றதொரு கூட்டணி அரசாங்கமே ஆட்சியில் இருப்பதாகவும் இந்த நிலையில் ஏனைய கட்சிகளையும் அரவணைத்து செல்லாது தன்னிச்சையாக முடிவெடுத்து செயற்பட்டால் அரசியல் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என்றும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்போது பிரச்சினை தீர்வுக்கு சகல கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டுமென்று பெரும்பாலான உள்நாட்டு எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும் ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வொன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்ற அதேநேரம், இலங்கை அரசுடனான இருதரப்பு பேச்சுகளின் மூலம் இணக்கப்பாடொன்று எட்டப்படாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்காது என்று சம்பந்தன் இங்கு உறுதியாக கூறியுள்ளார்.
அத்துடன், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வொன்றைக் காண ஐ.தே.க.வும் தயாராக இருக்கின்ற போதிலும் இது தமிழ் மக்களுக்கு முக்கியமான பிரச்சினை என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பெயர்களை பிரேரிக்காவிட்டால் ஐ.தே.க.வும் அதன் உறுப்பினர்களை தெரிவுக்குழுவுக்கு நியமிக்காது என்றும் அப்படி நியமிப்பதில் பலன் கிடையாது என்றும் எதிர்க்கட்சி பிரதம கொறடா ஜோன் அமரதுங்கவும் இதன் போது தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, இலங்கை பல்லின சமூகங்களைக் கொண்ட நாடு என்பதால் அனைவரையும் சரி சமமாக மதித்து சகலரையும் அரவணைக்கும் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்றே ஐ.தே.க. எதிர்பார்ப்பதாகவும் இதில் சகலரும் வெற்றி பெற்றவர்களாக இருக்க வேண்டுமே தவிர எவரும் தோற்றவராக இருக்கக்கூடாது என்றும் இச் சந்திப்பில் ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
இதேநேரம், இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் போன்றவற்றை இந்திய எம்.பி.க்கள் குழு அழுத்தியுரைத்ததாகவும் அதிகாரப் பகிர்வு போன்ற வார்த்தைகளை இதன்போது அவர்கள்
Source: http://www.thinakkural.com/news/all-news/local/12972-q13--3-.html
No comments:
Post a Comment