இராஜாங்கத் திணைக்கள மற்றும் பென்டகன் அதிகாரிகள் தமக்கு சமமான பதவிகளிலுள்ள சீன அதிகாரிகளுடன் கடந்தவருடம் இரண்டு யுத்த பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இரு தரப்பினரிடையேயுமான இராணுவ ஆக்கிரமிப்புகள் உணரப்பட்டாலோ அல்லது இருதரப்பும் இலக்கு வைக்கப்பட்டாலோ எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது அல்லது தடுப்பது போன்ற முறைமைகளை இப்பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதன் அடுத்த அமர்வானது மேயில் நடைபெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச ஆதரவுடனான வேவு பார்த்தல் தொடர்பான தோற்றப்பாட்டினை கண்டுகொள்வதற்காக தமது ஏமாற்றத்தினை வெளியிடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தினை அமெரிக்காவுக்கு இப்பயிற்சிகள் வழங்கியிருந்தபோதும் சீனா போரில் ஈடுபடுகின்றதென்ற நிலைப்பாடு மறைந்திருந்தது.
சக்திமிக்க உறவுமுறை மாற்றமடைந்துள்ளதென்ற நிலைப்பாட்டினை சீனா தாமாகவே தீர்மானித்துக்கொண்டது. அத்துடன், தமக்கு ஆதரவான வழியிலேயே அவர்கள் அந்த மாற்றத்தினை ஏற்படுத்தினரென அமெரிக்காவின் தந்திரோபாய மற்றும் சர்வதேச கற்கைநெறிகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் ஜிம் லூவிஸ் கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை இராணுவம் மிகவும் வல்லமை பொருந்திய அமைப்பு. அமெரிக்காவை ஒரு இலக்காகவே அவர்கள் நோக்குகின்றனர். தமது நடவடிக்கையை நியாயப்படுத்தும் திட்டங்கள் தம்மிடம் இருப்பதாக அவர்கள் உணர்கின்றனர். அமெரிக்கா அழிவடைவதாக அவர்கள் கருதுகின்றனரெனவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் போர்ப் பயிற்சிகள் இராஜதந்திர மற்றும் சர்வதேச கற்கைகளுக்கான அமெரிக்க நிலையம் மற்றும் சமகால சர்வதேச உறவுகளுக்கான சீன நிலையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதனால், அரச அதிகாரிகளும் அமெரிக்க புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் உத்தியோகப் பற்றற்ற முறையில் தொடர்புகளை மேற்கொள்ள அனுமதியளித்தது.
“ட்ரக் 1.5’ இராஜதந்திரம் என அழைக்கப்படும் இம் முறைமையானது பூரணமான பேச்சுகள் இன்றி நெருக்கமான அரசுகள் இடர் நெருக்கடி முரண்பாட்டு முகாமைத்துவத்தினை மேற்கொள்ள வழிவகுத்தது.
Source: http://www.thinakkural.com/news/all-news/world/12987-2012-04-17-19-12-14.html
No comments:
Post a Comment