Wednesday, April 25, 2012

சரத் பொன்சேகாவை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு


சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை நவலோக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்த்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்க வேண்டியிருப்பதாக பொன்சேகாவின் சட்டத்தரணி நீதிமன்றில் இன்று தெரிவித்தார். மருத்துவ நிபுணர் ஒருவரும் இதனை உறுதிப்படத்தினார்.
இதனையடுத்தே அவரை மருத்துவ சிகிச்சைக்காக நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator