Thursday, April 26, 2012

மன்னார் நகர சபையின் சந்தை தெற்கு வர்த்தகர்களால் ஆக்கிரமிப்பு

தலைமன்னார் நிருபர்

மன்னார் தினச்சந்தை வியாபார நிலையத்தொகுதிக்கு முன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆகியோரது புகைப்படங்கள் கட்டவுட் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மன்னார் நகர சபையினைக் கைப்பற்றியது.
இந்த சந்தைத் தொகுதி மன்னார் நகர சபைக்குச் சொந்தமானது. இந்த சந்தைத் தொகுதியில் மன்னாரைச் சேர்ந்த 5 வியாபாரிகளுடைய கடைகள் மட்டுமே உள்ளது. ஏனைய கடைகள் அனைத்தும் தென்பகுதியைச் சேர்ந்தவர்களது வியாபார நிலையங்களே உள்ளன.

றுதன் பகுதி வியாபாரிகள் மன்னார் நகரசபைக்குச் சொந்தமான சந்தைத் தொகுதியை ஆக்கிரமித்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தென்பகுதி வர்த்தகர்களுக்கு பின்புலமாக அரச தரப்பு அரசியல் இடம்பெற்று வருகின்ற போதும் மன்னார் நகரசபை மௌனம் காத்து வருவதற்கு  தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் மன்னார் வர்த்தகர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13640-2012-04-26-09-55-01.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator