வன்னி மாவட்ட சுகாதாரத்
துறையில் பணி நியமனம் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள அரசியல் தலையீட்டைக்
கண்டித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வன்னி நிலம் தழுவிய ரீதியில்
பாரிய ஆர்ப்பாட்டமும் உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
வன்னி மாவட்ட வைத்தியசாலைகளில் சுமார் 15 வருடங்களாக போருக்கு மத்தியிலும் தற்காலிக அடிப்படையில் சேவையாற்றிய ஊழியர்களை புறந்தள்ளிவிட்டு அரசியல் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்ததுடன், உரிய நடவடிக்கை எடுக்குமாறு, வட மாகாண ஆளுநரிடம், கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், அரசியல் தலையீட்டிற்கு எதிராக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைத்து பாரிய போராட்டத்திற்கான ஏற்பாடுகளை அடைக்கலநாதன் மேற்கொண்டுவருகின்றனர்.
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு சிற்றூழியர் நியமனம் வழங்கவென நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்களை ஒதுக்கிவிட்டு அரசியல்வாதிகளின் அடிவருடிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஊழியர்களினால் தன்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.யிடம் முறையிட்டுள்ளனர்.
Source: http://184.107.230.170/

No comments:
Post a Comment