மன்னார், தலைமன்னார் நிருபர்கள்
மன்னார் மாவட்டத்திலுள்ள கடற்கரையோரப் பகுதிகளிலும் ஆற்றுப் பகுதிகளிலும் அதிகளவான மணல் சட்டவிரோதமான முறையில் அகழப்படுவதாக பொதுமக்களும் பொது அமைப்புகளும் தெரிவிக்கின்றன. மன்னார் மாவட்டம் தீவுப் பகுதியில் உள்ள கடற்கரையோரங்கள், பனைக்காடுகள், பொது இடங்கள் போன்வற்றிலு ம் பெருநிலப்பரப்பிலுள்ள அருவி ஆறு, பாலியாற்றுப் பகுதிகளிலும் அதிகளவான மண் அகழ்வு இடம்பெறுகின்றது.
இதன் மூலம் ஆற்று வெள்ளம், கடல் நீர் கிராமத்திற்குள் புகும் அபாயம் தோன்றியுள்ளதாக பொது அமைப்புகள் அரச அதிகாரிகளிடம் கடிதம் மூலமாக தெரியப்படுத்தியுள்ளதோடு இதனைக் கட்டுப்படுத்தவும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மண் அகழ்விற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் சட்டவிரோதமான முறையிலும் முறைகேடான முறையிலும் மண் கடத்தல் இடம்பெறுகின்றது.
மன்னார் தீவுப் பகுதிக்குள் மக்கள் மண்ணை பெற்றுக்கொள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருவதோடு தீவுப் பகுதிக்கு வெளியிலிருந்து அதிகளவான பணம் கொடுத்தே தமது கட்டுமானத் தேவைகளுக்கு தேவையான மணல் மண்ணைப் பெற்றுக்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13595-2012-04-25-19-18-55.html
![]() |
| Photo:http://3.bp.blogspot.com |

No comments:
Post a Comment