![]() |
| photo:http://www.the-nri.com |
இந்தப் பகுதியில் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டி ஓட்டுநர்களில் சிலர் யுவதிகளுடன் தவறான முறையில் நடந்துகொள்வதாகவும் பெண்களுடன் முச்சக்கர வண்டியில் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவதாகவும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு செல்லப்பட்டதோடு ஊடகங்கள் மூலமாகவும் இந்தப் பிரச்சினை வெளிக்கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துசார தளுவத்தவின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த இடத்திலிருந்து சேவையினை மேற்கொள்ளும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கும் மன்னார் பொலிஸாருக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் அவசர சந்திப்பு இடம்பெற்றுது.
இதன் போது இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு பொலிஸ் அதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் இனி வரும் காலங்களில் பெண்களுடன் தவறான முறையில் நடந்துகொள்ளும் முச்சக்கர வண்டி சாரதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும்.
அவர்களுடைய சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டு இரத்து செய்யப்படுமென பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இனி வரும் காலங்களில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் நடத்தைகள் இரகசியமாக அவதானிக்கப்பட்டு பிரச்சினைகளுக்குரியவர்கள் அடையாளம் காணப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு சிலர் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவதன் காரணத்தினால் அனைத்து முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்துவதாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் கலந்துரையாடலில் மன்னார் தனியார் பஸ் தரிப்பிடத்திற்கு முன் சேவையில் ஈடுபடும் 40 இற்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13594-2012-04-25-19-18-14.html

No comments:
Post a Comment