Wednesday, April 25, 2012

ஆச்சரியப்பட வைக்கும் அதிசயச் சிறுவன்

சென்னை: கண் முன்னால் கிடக்கும் கலண்டரில் திகதி, நாள் பார்ப்பதில் கூட குழப்பம் ஏற்படும். சில விநாடி யோசனைக்கு பிறகுதான் சரியான முடிவுக்கு வர முடிகிறது. ஆனால், 2030 ஆம் ஆண்டில் ஒரு மாதத்தையும் திகதியையும் சொன்னால் கிழமையை துல்லியமாக சொல்கிறான் 10 வயது சிறுவன். அதெப்படி...’ என்று யோசிக்கிறீர்களா? அவனுடைய அற்புத ஆற்றலைப் பார்த்து எல்லோருமே அதிசயித்துப் போகிறார்கள்.
ஸ்ரீராம் பாலாஜி! இவன்தான் அந்த அதிசய சிறுவன். அடையாறு ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறான். படிப்பில் படுசுட்டி என்று சொல்ல முடியாதவர். வகுப்பில் அமைதியானவன், கடுமையான உழைப்பாளி. இதுதான் அவனைப் பற்றி ஆசிரியை லதா கூறும் தகவல்.

அவனது அதிசய ஆற்றலைக் கண்டுபிடித்தது பற்றி ஆசிரியை லதா கூறியதாவது;
வகுப்பில் ஒருநாள் வியாழக்கிழமை என்ன திகதி என்று பார் என்றேன். ஆனால், அவன் கலண்டரைப் பார்க்காமலேயே திகதியை சொன்னான். உடனே அடுத்த வாரம் வியாழக்கிழமை என்ன திகதி என்றேன். அதையும் சரியாக சொன்னான். இந்த வருடத்தில் எத்தனை வியாழக்கிழமை என்றேன். அதற்கும் சளைக்காமல் பதில் சொன்னான். நமக்கு தெரியாததை அவன் சொன்னதும் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
உடனே அவனது பெற்றோரிடம் தொடர்பு கொண்டு விசாரித்தோம். அதற்கு அவர்கள் கூறும் போது, எப்போதும் செல்போனில் கலண்டர் பார்ப்பான் அவ்வளவுதான் என்றார்கள். அவனது ஆற்றலை சோதிப்பதற்காக நாங்கள் பல ஆண்டு கலண்டரை இன்டர்நெட்டில் படியிறக்கம் செய்து வைத்துக்கொண்டு அவனிடம் ஏதாவது ஒரு ஆண்டு மாதம் திகதியை சொல்லி கிழமையைக் கேட்போம்.
அதற்கு சரியான பதில் சொல்வான். 2030 ஆம் ஆண்டுவரை எந்த திகதியை சொன்னாலும் துல்லியமாக சொல்லி விடுகிறான். பல தடவை ஒரு புத்தகத்தைப் புரட்டினால் அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் மிகவும் அரிதாக சிலருக்கு போட்டோ போல் நினைவுக்கு வரும். இந்த மாதிரி நினைவாற்றலை ஐடிடிக் நினைவாற்றல் என்கிறார்கள். அவனை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது.

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator