இலங்கை கல்வித் திட்டத்தில் க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பாடங்களில் சீனமொழியும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கன்பூசியஸ் நிலையத்தில் இடம்பெற்ற சீனமொழி பயிற்சி நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதனடிப்படையில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கென சீனமொழியினைக் கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து பயிற்றுவிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் பெளதிக வளங்களை வழங்க சீனா முன்வந்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.
Source:http://184.107.230.170/~onlineut/Admin/news/Upload/News/66607d41fbb4cb0ab3e861c85d1da1a8.jpg
No comments:
Post a Comment