வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகவும் கல்வி கற்பதற்காக அங்கு
அனுப்புவதாகவும் தெரிவித்து பலரிடம் பணத்தை பெற்று மோசடி செய்ததாக
பொலிஸாரினால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த கொள்ளுப்பிட்டி பகுதியைச்
சேர்ந்த ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் இவ்வாறு 200 இற்கும் அதிகமானோரிடம் 150 இலட்சம் ரூபாவுக்கும்
அதிகமான தொகையை பெற்று மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றத்தடுப்புபொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கொள்ளுப்பிட்டி பகுதியில் இடமொன்றை சுற்றிவளைத்து இவரை கைது செய்துள்ளதோடு, இவரிடமிருந்து போலி ஆவணங்களையும் போலி கல்விச் சான்றிதழ்களையும் மற்றும் கணினியொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
2003 இல் இருந்து 2006 வரையான காலப்பகுதிக்குள் வெள்ளவத்தை பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையமொன்றை நடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து நிதிமோசடியில் ஈடுபட்டமை தொடர்பாக சந்தேக நபருக்கு எதிராக 30 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை சந்தேகநபர் போலி விமான பயண அனுமதிப்பத்திரத்துடன் பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளதோடு, இவரின் பெயரும் விமான பயணகட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்கப்பட்டு இவரின் பயணங்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கடந்த 9 வருட காலமாக கொள்ளுப்பிட்டி மற்றும் பேராதெனிய ஆகிய பிரதேசங்களில் தலைமறைவாக இருந்ததாகவும் தான் ஒருவரிடம் 11 இலட்சம் ரூபா என்ற ரீதியில் பணம் அறவிட்டிருந்ததாகவும் விசாரணையின்போது தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தற்போது கொழும்பு குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதோடு, இவரின் மோசடியில் சிக்கியோர் இருப்பின் முறைப்பாடுகளை செய்யுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Source: http://www.thinakkural.com/

No comments:
Post a Comment