மின் தடை நேரத்திலும், மின் வசதி இல்லாத இடங்களிலும் செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய புதிய கருவி கண்டுபிடித்துள்ளதாக சென்னை பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரி முதல்வர் ஆர்.எம்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தக் கல்லூரியில் நேற்று நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்களின் 16 கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.இது குறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், மின் தடை நேரத்திலும், மின் வசதி இல்லாத இடங்களிலும் செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய புதிய கருவி கண்டுபிடித்துள்ளோம். இதில் ஒரே நேரத்தில் 3 செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றலாம். இந்த கருவியை ரூ.75,க்கு விரைவில் விற்க உள்ளோம் என்றார்.
Source: http://www.seithy.com/breifNews.php?newsID=58920&category=IndianNews&language=tamil
No comments:
Post a Comment