Friday, April 20, 2012

10 கிலோ ஆமை இறைச்சியை திருடிய பொலிஸார் மீது நடவடிக்கை

மன்னார் நிருபர்

நீதிமன்றத்துக்கு ஒப்படைக்க வேண்டிய 34 கிலோ ஆமை இறைச்சியில் 10 கிலோ இறைச்சியைத் திருடிய பொலிஸாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் மன்னார் வங்காலையில் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி வங்காலையிலிருந்து மன்னார் நோக்கி வரும் பஸ்ஸில் ஆமை இறைச்சி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து பொலிஸார் பஸ்ஸில் சோதனை நடத்திய போது 34 கிலோ ஆமை இறைச்சியுடன் குடும்பப் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர் அமர்ந்திருந்த ஆசனத்துக்கு அடியில் உறைகளால் பொதி செய்யப்பட்டிருந்த ஆமை இறைச்சியை பொலிஸார் கைப்பற்றினர்.
இதனையடுத்து அந்தப் பெண்ணை வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் இறைச்சியையும் பொலிஸார் நீதிமன்றில் ஒப்படைத்தனர்.
இதன் பின்னர் நீதிபதி கே. ஜீவராணியின் பணிப்புரைக்கமைய ஊழியர்கள் ஆமை இறைச்சியின்  நிறையை நிறுத்துப் பார்த்த போது 24 கிலோ மாத்திரமே இருந்தது.
தகவல் அறிந்த நீதிபதி உடனடியாக பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்துள்ளதோடு 10 கிலோ இறைச்சியைத் திருடிய பொலிஸ் அதிகாரிகளை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்துமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13199-10-------.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator