Friday, April 20, 2012

மிகச் சிறந்த கையெழுத்துக்கான விருதை வென்ற இரு கரங்களுமற்ற சிறுமி

வாஷிங்டன் :  பிறக்கும் போதே இரு கரங்களுமின்றிப் பிறந்த அன்னி கிளார்க் என்னும் 7 வயதுச் சிறுமி மிகச் சிறந்த கையெழுத்துகளுக்கான தேசிய விருதொன்றை வென்றுள்ளார்.

மிகச் சிறந்த கையெழுத்தினைத் தெரிவு செய்வதற்காக நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் இப்போட்டிக்கான விருது ஒரு கேடயத்தையும் ஆயிரம் டொலர்கள் பணப்பரிசையும் கொண்டதாகும்.
விருதைப் பெற்றுக் கொண்ட சிறுமி தான் எவ்வாறு எழுதுகிறாள் என்பதை அங்குள்ளவர்களுக்கு விளக்கும் முகமாக தனது இரு முழங்கைகளுக் கிடையிலும் பென்சிலைக் கெட்டியாகப் பற்றிப் பிடித்து சிறப்பாக எழுதிக் காட்டியுள்ளார்.
அனைத்துத் துறையிலும் மிகச்சிறந்த திறமைசாலியாக அன்னி விளங்குவதாக ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
மேலும் இந்த குறைகளுக்கு மத்தியிலும் கத்தரிக்கோல் மற்றும் பசை என்பவற்றைப் பயன்படுத்தல், ஆடை அணிவது, உணவு உண்பது, நீந்துவது மற்றும் மோட்டார் வாகன சவாரி போன்ற செயல்களையும் அன்னி சிறப்பாக செய்து வருவதாக அவரது ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.




மாணவர்களின் கையெழுத்தாற்றலை ஊக்குவிப்பதற்காக வருடாந்தம் அமெரிக்காவில் தேசிய ரீதியாக இப்போட்டி  நடத்தப்படுகிறது. சுமார் 25 இலட்சம் மாணவர்கள் இதில் பங்கேற்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


அன்னி பெற்றோரான ரொம் மற்றும் மேரி எலன் கிளார்க்குக்கு 3 சொந்தப் பிள்ளைகளும் அன்னி உள்ளிட்ட சீனாவைச் சேர்ந்த ஆறு சுவீகாரக் குழந்தைகளும் உள்ளனர்.
அன்னி 2 வயதிலிருந்து ரொம் மற்றும் மேரி எலன் கிளார்க் தம்பதியினருடன் அமெரிக்காவின் மேற்கு பென்சில்வேனியா மாநிலத்தில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Source: http://www.thinakkural.com/

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator