Thursday, April 19, 2012

சீனாவில் உள்ள உலகில் பெரிய அணை உடையும் அபாயம்: 1 லட்சம் பேர் வெளியேற்றம்

உலகிலேயே பெரிய அணை சீனாவில் உள்ள யாங்சி ஆற்றில் 2006-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து 22 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணை கட்டுமான பணி 1994-ம் ஆண்டு தொடங்கி 2006-ல் முடிவடைந்தது.

இந்த அணையை கட்டி முடிக்க ரூ.2லட்சம் கோடி செலவிடப்பட்டது. அப்போது அணை பகுதியில் இருந்த 14 பெரிய நகரங்கள், 133 சிறு நகரங்கள், 1350 கிராமங்கள் காலி செய்யப்பட்டு 14 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அணை கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து அடிக்கடி அணை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதுவரை 96 தடவை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இனியும் 5386 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கண்டறிந்து உள்ளனர்.


நிலச்சரிவை தடுக்க 355 இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். ஆனால் நிலைமை மோசமாகவே உள்ளது. அடிக்கடி நலச்சரிவு ஏற்படுவதால் ஒரு வேளை அணை உடைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

எனவே இந்த பகுதியில் உள்ள 1 லட்சம் மக்களை நிரந்தரமாக அந்த இடத்தை விட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளனர்.

http://thaaitamil.com/?p=16264

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator