Thursday, April 19, 2012

சூடான் தென் சூடானுக்கு எதிராக யுத்தப் பிரகடனம்

சூடானின் திபர் ஒமர் அல் பஷீர் வியாழக்கிழமை தென் சூடானுக்கு எதிராகத் தனது யுத்தப் பிரகடனத்தை விடுவித்துள்ளார். தென் சூடான் அரச தலைவர்களை பூச்சிகள் என வர்ணித்துள்ள அவர் விரைவில் அவர்களுக்கு எதிராக பாடம் கற்பிக்க போவதாகவும் கூறியுள்ளார்.

தென் சூடான் அரசாங்கத்தைக் களைப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்த யுத்தப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். மிக நீண்ட உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் தென் சூடான் மிகச் சமீபத்திலேயே அதாவது ஜூலை 9 2011 இல் விடுதலை பெற்று தனி நாடானாது. தற்போது எண்ணெய் வளம் மிக்க தென் சூடானின் எல்லைப் பகுதிகளை கைப் பற்றுவதற்காக சூடான் அவ்வப்போது தாக்குதல்களை மேற்கொண்டு வந்தது.


சூடானின் பாராளுமன்றத்தில் தென் சூடானின் ஆளும் கட்சி ஒரு எதிரியாகக் கணிக்கப்பட்டதுடன் இவர்களைத் தோற்கடிக்கும் வரை யுத்தத்தை மேற்கொள்வது என முடிவெடுக்கப் பட்டது. கடந்த கோடைக் காலத்திலிருந்து சூடானின் எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் மோதல்களை அதிகரித்திருந்தன. ஐ.நாவின் பாதுகாப்புப் பிரிவு இரு நாடுகளுக்கும் பொருளாதாரத் தடைகளை விதித்ததுடன் தமக்கிடையேயான வன்முறைகளைக் இவை கை விட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேலும் தென் சூடான் ஒரு நாளைக்கு 60 000 பரெல் வரை எண்ணெய் எடுக்கக் கூடிய தமது பிரதேசத்தை விட்டு தனது படைகளை அகற்ற வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்திருந்தது. எனினும் இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் இரு நாடுகளும் தமக்கிடையே சண்டையை தீவிரப் படுத்தி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
Source: http://www.vannionline.com/2012/04/blog-post_4405.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator