Saturday, April 21, 2012

1000 கோபுரங்களுடன் Hutch 3G ஆரம்பம் _

Hutchடெலிகொம் லங்கா நிறுவனம் இலங்கையில் தமது 3G சேவையை இன்று முதல் ஆரம்பிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Hutch 3G சேவையை மேல் மாகாணத்தில் ஆரம்ப கட்டமாக பெற்றுக்கொள்ள முடியும். அது தவிர நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான சேவையை 1000 கோபுரங்களுடன் எதிர்வரும் ஜுலையில் விஸ்தரிக்கவுள்ளதாக Hutch நிறுவனம் தெரிவித்துள்ளது.

3G தொலைத்தொடர்பு கோபுரங்கள் தவிர 2G தொலைத்தொடர்பு கோபுரங்களையும் அமைத்துள்ள ர்ரவஉh நிறுவனம் தற்போது ஏனைய அனைவரையும் விட முன்னிலையிலுள்ளது. ஒரு சில மாதங்களுக்கு முன்னர் பிற்கொடுப்பனவு சேவைகளை ஆரம்பித்த ர்ரவஉh நிறுவனம் தற்போது 2G சேவையை ஆரம்பித்துள்ளது.

'இலங்கை சனத்தொகையில் அண்ணளவாக 10 வீதமானோரே இணையத்தளத்தை பயன்படுத்துகின்றனர். எனவே Hutch 3G வளர்ச்சியை நோக்கி செல்லும் என்பதை உறுதியாக கூற முடியும்" என Hutch றுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஆனந்த் பிரகாஷ் கூறினார்.

இலங்கையில் நிலையான தொலைபேசி மற்றும் கையடக்க தொலைபேசி பாவனை பாரிய வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. எனினும் இணையத்தள பாவனை வீதம் குறைவாகவே உள்ளது. எமக்குள்ள வாய்ப்புக்களை பயன்படுத்தி அனைவரையும் சென்றடைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

' 3G தொழில்நுட்பம் இலங்கைக்கு புதிதல்ல. பாவனையாளர்களுக்கு வேகமானதும் தடையில்லாததுமான சேவையை வழங்குவதே எமது நோக்கம். பாவனையாளர்கள் தமக்கு தேவையானதை தரவிறக்கம் செய்வதற்கும் பதிவேற்றம் செய்வதற்கும் மிக வேகமான புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். எமது புதிய தொழில்நுட்ப சேவையானது தடையில்லா இணையத்தள சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். அத்துடன் அது புதுவிதமான 3G அனுபவமாகவும் அமையும் என அவர் குறிப்பிட்டார்.

அபூர்வமானதும் மனதை கவரும் வகையிலும் அமைந்துள்ள Hutch 3G சேவையை பாவனையாளர்கள் தமது தேவைக்கேற்ற வகையில் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 'இத்தகைய சேவையை கொழும்பிலுள்ள ' Hutch Experience Zones" பகுதிகளிலும் அதற்கு அப்பால் சுப்பர் மார்க்கட் போன்றவற்றிலும் பெற்றுக் கொள்ள முடியும் என நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

Hutch நிறுவனத்தின் 3G சேவை முதலீட்டுக்கு அதன் தாய் நிறுவனமான Whampoa குழு பின்னிலையிலிருந்து ஊக்குவிக்கின்றது. இலங்கை அரசாங்கம் பல்வேறு புதிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வெளிநாட்டு முதலீடுகளை உள்வாங்கி நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை விஸ்தரித்து செல்கின்;றது. தொலைத்தொடர்பு துறையில் ஜாம்பவான்களான எமது தாய் நிறுவனம் எம்முடன் இருப்பது எமது பலமாகும்" என ஆனந்த் பிரகாஷ் சுட்டிக்காட்டினார்.
Source: http://www.virakesari.lk/

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator