Saturday, April 21, 2012

கிழக்கு மாகாணத்தை ஜுலையில் கலைக்க அரசு திட்டம்? அதிர்ச்சியில் பிள்ளையான்!

கிழக்கு மாகாணம் உட்பட மூன்று மாகாணசபைகளைக் கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்துவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளையே கலைத்து விட்டு தேர்தலை நடத்தும் திட்டம் அரசுக்கு உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜுலை மாதமளவில் இந்த மாகாணசபைகளைக் கலைத்து விட்டு செப்ரெம்பரில் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த ஊடகம் மேலும் கூறியுள்ளது.

இந்தப் பகுதிகளில் ஆளும்கட்சியின் செயற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ளும்படி மகிந்த ராஜபக்ஷ கட்சி அமைப்பாளர்களிடம் கேட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளையில் கிழக்கு மாகாணத்துக்கான தேர்தலை நடத்தும் அரசின் முடிவு தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் பெரும் அதிர்ச்சியடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தன்னிடம் யாரும் ஆலோசனை கலக்கவில்லை எனவும் ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டே பிள்ளையான் முதலமைச்சரானவர் என்பது குறிப்பிட்த்தக்கது. தற்போதைய நிலையில் ஆளும் கட்சியின் சார்பில் அமைச்சர் ராவூப் ஹக்கீமைக் களமிறக்குவதற்கு ஆளும் கட்சி தயாராகவிவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன
source: http://www.pooraayam.com/tamileelam/3635-2012-04-21-09-52-07.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator