Wednesday, April 18, 2012

இலங்கையில் பொருத்தப்பட்ட கடல்கோள் எச்சரிக்கை கோபுரங்கள் 10 இயங்கவில்லை கடந்த வார பூமி நடுக்கத்தில் தெரிந்தது

இந்தோனேஷியாவை அண்மித்த பகுதியில் கடந்த 11 ஆம் திகதி ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து இலங்கையில் பொருத்தப்பட்டுள்ள கடல்கோள் எச்சரிக்கை கோபுரங்களில் 10 கோபுரங்கள் செயற்படாதிருந்தமை  கண்டறியப்பட்டுள்ளது. சில இடங்களில் அன்றைய தினம் கடல்கோள் எச்சரிக்கைக் கோபுரங்கள் செயற்படவில்லை என கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளையடுத்து குறித்த 10 கோபுரங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இடர்  முகாமைத்துவ நிலையம்  தெரிவித்துள்ளது.
இருப்பினும், நாட்டின் கரையோரங்களில் பொருத்தப்பட்டுள்ள 74 கடல்கோள் எச்சரிக்கை கோபுரங்களில் 64 கோபுரங்கள் உரிய முறையில் செயற்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இவற்றில் 5 கோபுரங்கள் ஏற்கனவே செயலிழந்துள்ளதாகவும் மற்றைய 5 கோபுரங்களும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அன்றைய தினம் செயற்படாதிருந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் செயலிழந்துள்ள எச்சரிக்கை கோபுரங்களை துரித கதியில் திருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் ஊடக விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதி பணிப்பாளர் சரத்லால் குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Source: http://www.thinakkural.com/news/all-news/local/13045------10-------.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator