சிறிலங்கா அரசின் பணிகளில் தாம் பூரண திருப்தி அடைவதாக இலங்கைக்கு
சென்றிருக்கும் இந்திய நாடாளுமன்ற குழு இன்று நண்பகல் சிறிலங்கா நாடாளுமன்ற
சபாநாயகர் சமல் ராசபக்ச வழங்கிய விருந்தில் கலந்து கொண்டு தெரிவித்தனர்.
இன்று நண்பகல் சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு சென்ற இக்குழுவினருக்கு
சபாநாயகர் சமல் ராசபக்ச விருந்து வழங்கினார். தமக்கு வழங்கிய விருந்திற்கு
நன்றி தெரிவித்த இக்குழுவின் தலைவி சுஸ்மா சிறிலங்கா அரசின் பணிகளில் தாம்
பூரண திருப்தி அடைவதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக இக்குழுவினர்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை சந்தித்துக்
கலந்துரையாடினர். ‘இலங்கையில் அகதிகள் பிரச்சினை 30 வருடகாலமாக
இருந்துவரும் ஒன்றாகும்.
இருந்தபோதிலும் இடம்பெயர்ந்தோரில் 95 வீதமானோரை அனைத்து வசதிகளுடனும் அரசாங்கம் மீள்குடியமர்த்தியுள்ளது. அவர்களுக்குத் தேவையான உட்கட்டுமான வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மிகக் குறுகிய காலத்தில் வழமையான நிலைக்குக் கொண்டுவந்துள்ளோம்’ என அமைச்சர் பஷில் தெரிவித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியமர்த்துவதிலும் உட்கட்டுமான வசதிகளை செய்துகொடுப்பதிலும் இலங்கை அரசாங்கத்தின் கரிசனை தொடர்பில் இந்திய சர்வகட்சி பாராளுமன்ற குழுவினர் பூரண திருப்தியடைந்ததாக அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
SourcE: http://www.thinakkathir.com/?p=34713

No comments:
Post a Comment