Thursday, April 12, 2012

மன்னாரில் க.பொ.த(சா.த)-2011 பரிட்சையில் 9ஏ பெற்ற 4 மாணவர்களும் கௌரவிப்பு

[12-04-2012]

கடந்த வருடம் இடம் பெற்ற க.பொ.த (சா.த)-2011 பரிட்சையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் 9ஏ அதி விசேட சித்தி பெற்று சாதணை படைத்துள்ளனர்.

-தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களில் இருவரும்,ஆங்கில மொழி மூலம் பரிட்சைக்குத் தோற்றிய இருவரும் இவ்வாறு அதி விசேட சித்தியை பெற்றுள்ளனர்.

குறித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வெண்று நேற்று [11-04-2012]புதன் கிழமை காலை மன்னார் வலயக்கல்விப்பணிமனையின் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது தமிழ் மொழி மூலம் பரிட்சைக்குத்தோற்றிய மன்-பற்றிமா ம.ம.வி மாணவன் வை.ஆர்.சிகான் குரூஸ்,மன்-அல்மினா ம.வி மாணவி எம்.ஏ.நிபாயா,மற்றும் ஆங்கில மொழி மூலம் பரிட்சைக்குத் தோற்றிய மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி ஞானதாஸ் மேரி சுரேஸ்கா,மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் ஜெரோம் எமில் றொசிங்டன் ஆகிய 4 மாணவர்களும் 9ஏ அதி விசேட சித்தியை பெற்றுள்ளனர். இதன் போது குறித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த கௌரவிப்பு நிகழ்வின் போது மன்னார் வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.


இவ்விடையம் தொடர்பில் குறித்த மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,,,,


-தாங்கள் இவ்வாறு சித்தியடைந்தமைக்கு முக்கிய காரணமாக ஓய்வு பெற்ற முன்னால் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆபெல் ரெவல் அவர்களுக்கும் அடங்குவதாகவும் தமக்கு பல வழிகளிலும் உதவிகளை மேற்கொண்டு குறித்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள உதவி புரிந்த அவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


குறிப்பு:-குறித்த நான்கு மாணவர்களுக்கும் மன்னார் வின் நிர்வாகம் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.
Source: MannarWin.com

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator