Thursday, April 12, 2012

நூறு வருடங்கள் பழைமைவாய்ந்த நீர்த்தாங்கி இடிந்து விழும் நிலையில்

மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்தில் காணப்படும் 100 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த மிகப்பெரிய நீர்த்தாங்கி எந்த நேரத்திலும் இடிந்து வீழ்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த காலங்களில் இதன் மூலமாகவே மன்னார் மாவட்டம் முழுவதுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. யுத்தத்தின் போது இதற்கும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் இதுவரை எந்தவிதமான பராமரிப்பு வேலைகளும் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இது காணப்படுகிறது.

இதன் காரணமாக இந்த நீர்த்தாங்கி சிறு சிறு துண்டுகளாக உடைந்து கீழே விழுந்து கொண்டிருக்கின்றது.அத்துடன் இதன் சீமெந்து மேற்பூச்சுக்கள் கழன்று துருப்பிடித்த இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இதுஅமைந்துள்ள மன்னார் பொது விளையாட்டு மைதனத்தில் தினமும் விளையாட்டு வீரர்களும் பொது மக்களும் கூடுவது வழக்கமாகும். எந்தநேரத்தில் இந்த நீர்த்தாங்கி தமதுதலையில் இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் இவர்கள் இதனை அண்ணாந்து பார்த்தவாறு செல்கின்றனர்.
இந்த நீர்த்தாங்கியின் மோசமான நிலைமையைப் பார்க்கும் போது அச்சம் தோன்றுவதாக மக்கள் கூறுகின்றனர். நீர்த்தாங்கிக்கு அருகில் மன்னால் தலைமன்னார் பிரதான வீதி உள்ளது.
இது யார் மீதாவது இடிந்து விழுந்து அனர்த்தத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர் இதனை இடித்து ஒதுக்க வேண்டுமென்பதே மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. உரிய அதிகாரிகள் இதனைக் கவனத்தில் எடுப்பார்களா என்று மக்கள் கேட்கின்றனர்.
Source:http://www.thinakkural.com/news/all-news/local/12696-2012-04-11-18-43-09.html

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator