Showing posts with label mannar news. Show all posts
Showing posts with label mannar news. Show all posts

Monday, May 7, 2012

சிங்களக் குடியேற்றம் மன்னாரில் துரிதகதியில்

வடக்கில் பல பாகங்களில் சிங்களக் குடியேற்றங்களைத் திட்டமிட்ட அடிப்படையில் அசுர வேகத்தில் அரங்கேற்றிவரும் இலங்கை அரசு, தற்போது மன்னார் மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக இடங்களில் சிங்களக் குடும்பங்களைக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதகதியில் முன்னெடுத்து வருகின்றது என மிகவும் நம்பகரமான முறையில் "உதயனு'க்குத் தெரியவருகின்றது.

மன்னார் மாவட்ட அரச அதிபர் சரத் ரவீந்திரவின் தலைமையின் கீழ் "மன்னார் மாவட்ட பௌத்த ஒன்றியம்'' என்ற அமைப்பை நிறுவி அதனூடாக ஆரம்ப கட்டப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அறியமுடிகின்றது.
http://184.107.230.170/~onlineut/Admin/news/Upload/News/images%20(4).jpgமன்னாரில் முதல் தட வையாக அமைக்கப்பட்டுள்ள இந்த பௌத்த அமைப்பில் இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பிக்குகள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
தமிழ் மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் மன்னார் அரச அதிபராக சரத் ரவீந்திர நியமனம் பெற்றபின்னரே மன்னாரில் சிங்கள ஆதிக்கத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இற்றைக்கு 6 வருடங்களுக்கு முன்னர் மன்னார் மடு சந்தியில் அத்துமீறி 60 சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. அதன் பின்னர் மீன்பிடித் தொழிலுக்காகத் தெற்கிலிருந்து சென்றோர் இராணுவத்தின் உதவியுடன் ஆங்காங்கே குடியமர்த்தப்பட்டனர்.
ஆனால், யுத்தத்திற்குப் பின்னர் வெளிப்படையாகவே சிங்களக் குடியேற்றங்கள் மன்னார் உள்ளிட்ட வடக்கில் அரங்கேற்றப்படுகின்றன. குறிப்பாக, மன்னார் மீள்குடியேற்றக் கிராமங்களில் சிங்களவர்களை இருத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரியவருகின்றது.
அத்துடன், மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு ஆலயக் கிராமத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மன்னார் வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, ஆலய வளாகத்தில் பௌத்த பாலர் பாடசாலையொன்று அமைக்கப்பட்டு வருகின்றது என்றும், காணிகளைத் துப்புரவாக்கி சிங்கள மக்களைக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது என்றும் தகுந்த ஆதாரங்களுடன் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

Source: http://184.107.230.170/~onlineut/News_More.php?id=209611032107143959


மன்னாரில் புத்தர் சிலை நிறுவும் அனுமதி இரத்து: ஆனால் சிலை அகற்றப்படவில்லை

Voice of Mannar

மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்காண அனுமதிப்பத்திரம் கடந்த வியாழக்கிழமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டச்செயலாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஆனால் புத்தர் சிலை இன்று நான்கு நாட்களாகியும் அகற்றப்படவில்லை.புத்தர் சிலை வைக்கப்பட்ட காணி இரு தனி நபருக்குச் சொந்தமானதாக காணப்பட்டது.இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அரசுத் தலைவரின் ஆலோசகரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவ விஜய சிங்க திருக்கேதிஸ்வரத்திற்கு சென்று புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டபின்னர் தனியாருக்கு சொந்தமான காணி என்பதால் அதனை அகற்றுமாறு கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிகின்றன..
Source: http://thaaitamil.com/?p=18203

Thursday, April 12, 2012

நூறு வருடங்கள் பழைமைவாய்ந்த நீர்த்தாங்கி இடிந்து விழும் நிலையில்

மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்தில் காணப்படும் 100 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த மிகப்பெரிய நீர்த்தாங்கி எந்த நேரத்திலும் இடிந்து வீழ்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த காலங்களில் இதன் மூலமாகவே மன்னார் மாவட்டம் முழுவதுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. யுத்தத்தின் போது இதற்கும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் இதுவரை எந்தவிதமான பராமரிப்பு வேலைகளும் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இது காணப்படுகிறது.

Saturday, April 7, 2012

மடுக்காட்டில் வெடிபொருட்களை எடுத்த மூவருக்கு விளக்கமறியல்

மன்னார் நிருபர்

மிதிவெடிகள் மற்றும் ரி. 56 ரக துப்பாக்கியின் ரவைகளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் மடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆ ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிவான் திருமதி கே. ஜீவராணி உத்தரவிட்டுள்ளார். மடுதட்சணா மருதமடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய அந்தோனிமுத்து செபஸ்டியான் பிள்ளை அவரது மகன் 28 வயதுடைய செபஸ்டியான்பிள்ளை அந்தோனிப் பிள்ளை மற்றும் 30 வயதுடைய ஞானப்பிரகாசம் அருள்தாஸ் ஆகியோரே கடந்த வியாழன் மன்னார் மாவட்ட நீதிவான் திருமதி கே. ஜீவராணி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டு அவரின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator