ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் இன்று காலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறிபுர பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அரவது சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். இதேவேளை எஹலியகொடை பிரதேசத்தில் மின்னல் தாக்கி சிறுவன் ஒருவன் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். 16 வயதுடைய பாடசாலை மாணவரொருவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சிறுவன் வைபவமொன்றில் கலந்து கொண்டிருந்த போதே மின்னல் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
Source; http://www.seithy.com/
No comments:
Post a Comment