Thursday, April 19, 2012

லண்டன் சோமரத்ன தேரரால் வல்லுறவுக்கு ஆளான பெண் 35 வருடங்களின் பின் சாட்சியளித்துள்ளார்

லண்டனில் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையரான, லண்டன் செல்ஸ்டன் விகாரை விகாராதிபதி சங்கைக்குரிய பஹலக சோமரத்ன தேரருக்கு எதிராக மேலும் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு ஐலெவோர்த் க்ரவுன் நீதிமன்றில் நேற்று (18) புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது 1970ம் ஆண்டு காலப்பகுதியில் 09 மற்றும் 10 வயது இருக்கும்போது தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை பெண் ஒருவர் நீதிமன்றில் விபரித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வகுப்பு முடிந்ததும் விகாரைக்குள் இந்த பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை வகுப்பில் 4 தொடக்கம் 16 வயதுடைய சிறுவர்கள் 20 பேர் வரை பங்குபற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள், அறையில் தனியாக இருந்ததாகவும் அந்த அறையில் மரத்தளபாடங்கள் காணப்பட்டதாகவும் பெட்டி அறையைவிட அந்த அறை சற்று பெரியது எனவும் பெண் ஒருவர் தனது பழைய ஞாபகங்களை குறிப்பிட்டுள்ளார்.

தேரர் தன்னை அவரது படுக்கை அறைக்கு தனியாக அழைத்துச் சென்று அவரது மடியில் தன்னை அமர வைத்துக் கொண்டதாக குறித்த பெண் நீதிமன்றில் சாட்சியளித்துள்ளார்.

பின்னர் இரண்டு தொடக்கம் மூன்று வருடங்கள் தனக்கு நேர்ந்த கதியை அப்பெண் விளக்கியுள்ளார்.

"அன்று நடந்தது பிழை என அறியும் பக்குவம் எனக்கு இருந்திருந்தால் நான் ஏதாவது சொல்லியிருப்பேன்" என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

ஆனால் 35 வருடங்களுக்குப் பின் குறித்த பெண் ஏன் இதனை சொல்கிறார் என்று வினவப்பட்டபோது அந்த சமயத்தில் துறவிகளின் செயல் அது என தான் உணர்ந்ததாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

"நான் ஒரு குழந்தை பருவத்தில், அது ஒரு விபத்து என்று நினைத்தேன். இன்று நான் வயதுக்கு வந்த பெண். இப்போது நான் உணர்கிறேன்" என பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் செல்ஸ்டன் விகாரை விகாராதிபதி சங்கைக்குரிய பஹலக சோமரத்ன தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இந்த பாலியல் குற்றச்சாட்டை அவர் முழுமையாக மறுத்துள்ளார் என பீபீசி தெரிவித்துள்ளது.
source: http://www.adaderana.lk/tamil/news.php?nid=24634

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator