
தமிழ் நாட்டின் கூடங்குளத்தில்
நிர்மாணிக்கப்பட்டுள்ள அணு உலையினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பை
தவிர்ப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக அணு சக்தி அதிகார சபை கூறியது.
ஜப்பான், புகுசிமாவில் ஏற்பட்டது போன்று
அணுகசிவு ஏற்பட்டால் அதனை முன் கூட்டி அறிவதற்காக இந்தியாவை நோக்கி ஐந்து
முன்னெச்சரிக்கை கோபுரங்களை அமைக்க உள்ளதாக அணு சக்தி அதிகார சபை தலைவர்
டாக்டர் ரஞ்சித் விஜேவர்தன கூறினார்.
இலங்கைக்கு சமீபமாக கூடங்குளத்தில்
அமைக்கப்பட் டுள்ள அணு உலையில் அணுக்கசிவு ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுக்க
எத்தகைய உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெறுவது என்பது குறித்து மின்சக்தி
எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க இந்தியாவுடன் பேச்சுநடத்தி வருகிறார்.
இந்த அணு உலையினால் 200 கிலோ மீற்றர்
தூரம் வரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறிய அவர். அதற்கு முகம்
கொடுக்கக் கூடியவாறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ள தயாராகி வருவதாக
குறிப்பிட்டார்.
இதன்படி, ஜூன் மாதத்தில் காங்கேசன் துறை
உட்பட 5 இடங்களில் முன்னெச் சரிக்கை கோபுரங்களை நிர்மாணிக்க உள்ளதாக கூறிய
அவர் இதன் மூலம் கூடங்குளத்தில் அணுக் கசிவு ஏற்பட்டால் முன் கூட்டி அறிய
முடியும் என்றார்.
Source: http://www.saritham.com/?p=56702