
அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்ற இவரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கமாறு சிறிலங்கா அரசுக்கு அவுஸ்ரேலியா கடும் அழுதங்களைக் கொடுத்திருந்தது.
இந்த நிலையில், நேற்றிரவு குணரட்ணம் கொழும்புக்கு அருகேயுள்ள காவல் நிலையம் ஒன்றுக்கு சென்று தன்னை வெளிப்படுத்தியதாக அவுஸ்ரேலியாவக்கான சிறிலங்கா தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்க தெரிவித்துள்ளார்.
“அவர் பத்திரமாகவும் நலமாகவும் இருக்கிறார்.
குணரட்ணம் மூன்று வெவ்வேறு பெயர்களில் மூன்று கடவுச்சீட்டுகளுடன் சிறிலங்காவில் இருந்துள்ளார்.
பிறேம்குமார் குணரட்ணம் என்ற பெயரில் அவர் சிறிலங்காவுக்குள் நுழையவில்லை.
அதனால் அவரது இருப்பிடத்தை எம்மால் அறிய முடியாதிருந்தது.
குணரட்ணம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு விட்ட நிலையில் அவரை விரைவில் சிறிலங்கா அதிகாரிகள் அவுஸ்ரேலியாவுக்கு நாடு கடத்துவார்கள்.
அவரை திருப்பி அனுப்புவதற்கு இதுதான் நல்ல வாய்ப்பு.
அவர் தனது நுழைவிசைவு காலம் முடிந்து நீண்டகாலமாக சிறிலங்காவில் தங்கியிருந்துள்ளார்“ என்றும் அட்மிரல் திசார சமரசிங்க மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சும் குணரட்ணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலதிக விபரங்கள் குறித்த இப்போது கலந்துரையாடுவது பொருத்தமற்றது என்று அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட குணரட்ணம் நேற்றிரவு கண்டுபிடிப்பு – அவுஸ்ரேலியாவின் அழுத்தத்துக்குப் பணிந்தது சிறிலங்கா |
http://www.puthinappalakai.com/view.php?20120410105966 |