Wednesday, April 18, 2012

தேசிய அருங்காட்சியகத்தில் 7 பேர் பணி நீக்கம்

கொழும்பு அருங்காட்சியக திருட்டுச் சம்பவத்தை அடுத்து அங்கு கடமையாற்றி வந்த ஏழு பேர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.


இதன்படி அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுபவர்கள் மற்றும் காரியலய உத்தியோகத்தர்கள் ஆகியோர் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.



இங்கு 40 இலட்சம் பெறுமதியுடைய மிகவும் தொன்மையான கண்டி இராசதானிக்குரிய வாள், தங்கக் காசுகள் உள்ளிட்ட பல பெறுமதி மிக்க பொக்கிஷங்கள் களவாடப்பட்டிருந்தன.


இவற்றில் சில பொருட்கள் பெட்டகத்தில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தது ஆனால் அது அதற்குரிய சாவியினைப் பயன்படுத்தி களவாடப்பட்டாதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.


அத்துடன் இச் சம்பவத்திற்கு ஒரு அரசியல்வாதியும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.


பொருட்கள் களவாடப்பட்டதனைத் தொடர்ந்து அருங்காட்சியகம் மக்கள் பார்வைக்கு முற்று முழுதாக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator