![]() |
Add caption |
யாழ். மாவட்ட சமுர்த்தித்
திட்ட பயனாளிகளுக்கு வழங்கவென இம்முறை 47 மில்லியன் ரூபா அரசினால்
வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் இ. சிவசிறி
தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் எற்கனவே வழங்கப்பட்டு
வருகின்ற முத்திரையின் பெறுமதியினை இம் மாதம் அமூலுக்கு வந்த புதிய
திட்டத்தின் ஊடாக இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தற்போது யாழ். மாவட்டத்தில் தற்போது 52 ஆயிரத்து 819 சமுர்த்திப் பயனாளிகள் உள்ளனர்.
இதுவரை காலமும் இவர்களுக்கு 250, 350, 375,
415, 525, 615, 900,1500 ரூபாவாக இருந்த முத்திரையின் பெறுமதிகளாக இருந்தன
ஆனால் தற்போது அதன் பெறுமதி அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 250, 350, 375, 415, 525, 615 பெறுமதி உடைய முத்திரைகள் 750 ரூபா ஆகவும் , 900 ரூபா பெறுமதியான 1200 ரூபா ஆகவும் 1500 ரூபா அதே பெறுமதி உடையதாகவும் பெறுமதி அதிகரித்துள்ளது.
4 பேர் கொண்ட குடும்பத்திற்கு 750 ரூபாவும் 5 மற்றும் 6 பேர் கொண்ட குடும்பத்திற்கு 1200 ரூபாவும் அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினரைக் கொண்ட குடும்பத்திற்கு 1500 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
இதற்கு முன்னர் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற பெறுமதியில் பொருட்கள் வழங்கப்பட்டதுடன் அதில் சிறு தொகை சமுர்த்தி வங்கியில் சேமிப்பும் செய்யயப்பட்டது.
ஆனால் இம் மாதம் முதலாம் திகதியில் இருந்து இப் புதிய திட்டத்தின் ஊடாக சமுர்த்தி வங்கிக் கணக்கிற்கு பணம் மட்டுமே வைப்பிலிடப்படவுள்ளது.
இதன்படி இம் மாத இறுதிக்குள் அவர்களுக்கான சமுர்த்தி உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தித் திட்டத்திற்காக யாழ். மாவட்டத்திற்கு என கடந்த மாதம் வரை 34 மில்லியன் ரூபா வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
http://184.107.230.170/~onlineut/News_More.php?id=55679988119570657
No comments:
Post a Comment