அறிவுப் பயணத்திற்கு வயது தடையாக அமையாது என்பதை மருதானையைச் சேர்ந்த
வயோதிப பெண்ணொருவர் எடுத்துக்காட்டியுள்ளார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பிரிவில் 72 வயதான குறித்த
வயோதிபப் பெண் பட்டத்தினை பெற்றுக்கொண்டுள்ளார். 10 வருடங்களுக்கு மேலாக
தான் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்த இலக்கினை எட்டியுள்ளதாகவும் இது
தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காலி வெலிவிடகே பகுதியில் பிறந்த கருணா வெலிவிடகே ஆசிரியையாக தமது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
இந்த விடயம் அனைவருக்கும் சிறந்ததொரு முன்னுதாரணம் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி சாந்த அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கின்னஸ் சாதனைகள் தொடர்பான செயற்குழுவிற்கு தெரியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/12483-72------.html