Wednesday, April 18, 2012

மகாத்மா காந்தியின் ரத்தம் படிந்த புல் ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம்!

மகாத்மா காந்தியின் ரத்தம் படிந்த புல் ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் போனது. லண்டனை சேர்ந்த முல்லாக் ஏல நிறுவனம் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை நேற்று ஏலம் விட்டது. காந்தியின் ரத்த துளி படிந்த புல் மற்றும் சிறிது மண், ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் போனது.
இவை 1948,ம் ஆண்டு ஜனவரி 30,ம் தேதி காந்தி கொல்லப்பட்டபோது, அங்கிருந்த கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பி.பி.நம்பியார் என்பவரால் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நம்பியார் எழுதிய கடிதமும் வைக்கப்பட்டிருந்தது. இதுபோல காந்தியின் கண்ணாடி, அவர் பயன்படுத்திய ராட்டை, எழுதிய கடிதங்கள், அரிய புகைப்படங்கள், படித்த புத்தகம் போன்றவையும் ஏலம் விடப்பட்டன.
கண்ணாடி ரூ.27 லட்சம், ராட்டை ரூ.22 லட்சம், அவர் படித்த புத்தகம் ரூ.8.61 லட்சத்துக்கு ஏலம் போனது. மொத்தமாக காந்தி சம்பந்தப்பட்ட பொருட்கள், ரூ.82 லட்சத்துக்கு ஏலம் போனதாக முல்லாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏலம் எடுத்தவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
http://www.seithy.co...&language=tamil

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator